தமிழே உயிரே

உள்ளத்தில் உணர்வாய் எழுந்து
சிந்தையில் விந்தை புரிந்து
கொடிய கூர் பற்களை கடந்து
மெல்லிய நாவினில் நடனமாடி
உமிழ்தினே குழைத்து
உன் மொழியால்
முதல் வார்த்தையாய்
அம்மா என அழைக்க
எத்தனை தவம் செய்தேனோ
என் உயிரே என் தமிழே!

எழுதியவர் : வெங்கடேஷ் (21-Jun-18, 8:52 pm)
சேர்த்தது : Venkatesh
பார்வை : 1665

மேலே