பிருந்தாவன வாசன்
வாசிப்பவன் புல்லாங்குழலில் இசையை ராதைதாசன்
வசிப்பவன் திருமகளை மார்பில் வைத்து ஸ்ரீநிவாசன்
கோபிகளுடன் நடனத்தில் குதூகலிப்பவன் கோகுலவாசன்
வாசித்தவன் கீதை எனும் பாடத்தை போர்க்களத்தில் அர்ச்சுன நேசன்
மார்பினில் திருத்துளாய் மாலை அணிந்து மகிழ்பவன் அந்த பிருந்தாவன வாசன் !