தமிழ் மண்
தமிழ் மண்ணில் பிறந்து தமிழனென்று சொல்வது தனிப்பெருமை...
வீரத்தின் விளைநிலம் தமிழ்மண்...
கலாச்சாரப் பெருமைகள் கொண்டது தமிழ்மண்...
விவசாயத்தில் விஞ்ஞானத்தை மிஞ்சும் புரட்சிகள் புரிந்தது தமிழ்மண்...
பெண்களை வீரத்தமிழச்சி என்று அறிமுகப்படுத்துவது தமிழ்மண்...
உலகம் வியக்கும் மருத்துவ முறைகளை கண்டறிந்தது தமிழ்மண்...
நாகரிகத்தின் முன்னோடி தமிழ்மண்...
கலாச்சாரத்தை போற்றிக் காப்பது தமிழ்மண்...
பரம்பரியத்தினால் தன் தொன்மையை சொல்வது தமிழ்மண்...
அள்ளஅள்ளக் குறையாத வரலாறுகளை உள்ளடக்கியது தமிழ்மண்...
உறவுகளாக இணைத்து வாழ வைப்பது தமிழ்மண்...
அடக்குமுறைகளுக்கு எதிர்த்து நிற்பது தமிழ்மண்...
உரிமைப் போராட்டங்களில் சமரசம் செய்ய மறுப்பது தமிழ்மண்...
உண்மைப் பெருமைகளை மறவாமல், தமிழின் அடையாளத்தோடு வாழ்வோம்...

