ராதையின் ராகம்
புள்ளி மான் துள்ளி ஓட
......கான குயில்கள் கானம் இசைக்க
வண்ண மயில் தன் வர்ணம் விரிக்க
......சிட்டு குருவிகள் சிங்காரம் செய்ய
செவ்வழகு கிளி கொஞ்ச
......நாற்புறமும் பசுமை போர்த்த
சில்லென சாரல் அடிக்க
.....சிறு மலர்களின் வாசம் வீச
இல்லம் எல்லாம் விளக்கொளியில்
......உள்ளம் மட்டும் உன் நினைவில்
கண்ணன் உன்னை....
.....என் கண்ணார காண்பேனா!!!!!
காத்திருக்கும் ராதை- இவளுக்கொரு
.....ராகம் இசைக்க வருவாயோ!!!!!
-கலைப்பிரியை