இளைஞர்கள் எழுச்சி

இளைஞர்கள் எல்லாம்
ஒன்று
சேருவோம்……..
நம்
தேசத்தை
நாம்
மாற்றிடுவோம்………..

விடியலுக்கு
புது விதியொன்று
நாம்
தருவோம்………………
விளக்கேற்றி
வருங்காலத்தை
வரவேற்போம்………….

விலங்குகளை
உடைத்தே
விடுதலை அடைவோம்………
அதிகாரத்தில், அகங்காரம்
கொண்டவரை
விரட்டி அடிப்போம்…………

வேலையில்லா
இளைஞர்
சமுதாயம்
வேடிக்கை
பார்க்காது இனி ஒரு நாளும்……….

திறமைக்கு
வாய்ப்பொன்று
நாம்
தருவோம்……….
தீது
எதுவும் இன்றி
வாழ்வோம்………..

மற்றவரை
வாழ வைப்போம்
என்ற
உறுதிமொழியை
நாம்
எடுப்போம்……..
முழுதும்
சுரண்டும்
கூட்டத்தை
முடக்கிடுவோம்………
நம்
மரபு வழியை
நாம்
காண்போம்…………….

நம் “தமிழ்”
மொழியை
நாம்
காப்போம்………
மதி கொண்டு
விதியொன்று
அமைப்போம்……………

வியர்வை சிந்தி
உழைக்கும்
விவசாயிக்கு
விதையிட்ட
பயிருக்கு பலன் கிடைக்க
உயிர்
உள்ளவரை
இளைஞர்கள்
நாம் போராடுவோம்………………….

இளைய
சமுதாயம்
வளர்ந்திட
ஒன்று சேர்ந்து
உழைத்திடுவோம்……………

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (29-Jun-18, 8:57 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 8810

மேலே