என் தோழன் மனமே என்றும் மாறாதே

என் தோழன் மனமே ஏன் இந்த மாற்றம் ?
வேண்டாமே இந்த மாற்றம்
என் தோழனின் கண்களில்
நீ தந்த சோகம் தெரிகின்றதே
வேண்டாமே மனம் உடைக்கும் இந்த வீணான மாற்றம் வேண்டாமே
உன் உள்ளம் தடுமாறுகையில் என் இந்த விடியல் தராத மாற்றம்
என் தோழனின் கைகள் கூட தடுக்கிறது
செவிகளில் எதோ எச்சரிக்கையிலே
ஏனோ மனமே நீ என் தோழனின்
செவிகளை கேட்காமல் செய்து விட்டாயோ
கண்களை திறவாமல் இமைகளை இருட்டில் கொண்டாயோ
தோழனே ஏன் உனக்கு பிடிக்காமல் செய்கிறாய்
உன் உள்ளம் தினம் தினம் துன்பப்படுகையில்
காண என் உள்ளம் வாடுதே
வேண்டாமே உன் விருப்பமற்று எதுவும் நிகழ்த்தாதே
நீயும் மாறாதே என் தோழா
நீ கண்ட கனவு
என்றும் நீ பட்ட உழைப்பு
நீ பட்ட துன்பம்
நீ கண்ட லட்சியம்
எல்லாம் போனதென்று மனம் மாறுகின்றாயே
உன் உழைப்பு என்றும் வீணாகாதே
நீ என்றும் உன் கனவை விட்டு தள்ளி போகாதே
உறுதியோடு இருந்தால் நிச்சயம் வெல்வாய் தோழா
என் தோழனின் மனமே என்றும் மாறாதே !

எழுதியவர் : பிரகதி (5-Jul-18, 11:42 am)
பார்வை : 845

மேலே