முகில்க் குடை
சூரியனுக்கு இந்த உச்சி வெயிலை
உயிலாய் எழுதி வைத்தது யார்
வெந்தணலாய் வீசுகிறதே !
என் பெண் மயில் இங்கு நடந்தால்
அவள் நிறம் கலைந்து விடாதா
பேரழகு குலைந்து விடாதா
கார் ,மேகமே ஒரு நிமிடம் நீ இங்கு
வந்து குடைபிடிக்க மாட்டாயா
அவள் வீடு போய்ச் சேரும் வரை
அஷ்றப் அலி

