காதலில் தோல்வி-வேதனை

ஒரே ஒரு பார்வையால்
என் மனதைத் திருடி
உன் மனதில் சிறைபிடித்தாய்
என்று நினைத்த நான்
பித்தானேன் உன்மீது காதல் கொண்டு
உன்னையே நினைத்திருந்தேன்
கனவில் காதல் கோட்டையும் கட்டி
அதில் நீ மன்னவன் , நான் மஹாராணி
என்ற நினைப்பில் வானில்
உயர உயர பறக்கும் வானம்பாடிபோல்
கற்பனையில் பறந்திருக்க
நீயோ என்னை விட்டு விட்டு
போய்விட்டாய் வண்டாய்
வேறோர் மலர்தேடி.........
மலர் நான் இங்கு வாடிட
செல்லரித்து போனதடா
என் காதல் கற்பனையெல்லாம்,
கனவு கோட்டையும் கலைந்து
உன்னையும் மறக்கத்தெரியாது
நீ தந்த வலியும் தாங்காமல் ....
இதுதான் காதலா என்று என்னை
அறியாமல் பிதற்ற .....என்னைப்போல்
இன்னும் ஒரு பெண்ணை நீ
உன் பார்வையின் வலையில்
சிக்க வைப்பாயே என்று நினைத்து
உன்னை பழி தீர்க்க என்னுள்
என் வேதனை கொற்றவையாகிறதே
உன்னை மீண்டும் சந்திக்க .....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வசுத (17-Jul-18, 7:17 am)
பார்வை : 93

மேலே