பெண்ணென்றாளே விந்தைதானோ...??

செவ்வாய் மினுக்கும் வெளி நோக்கி....
செவ்விதழ் பிரியா மொழி பேசி...
இடப்புற உடுக்கை தாலாட்ட...
இயல்பே யாதென இமை மறக்க...
எங்கும் மெய்யுடன் உன்வாசம்...
ஏகன் எனதுயிர் ஈர்கிறதே...
பரந்தப்பெறுவெளி கொள்ளாதோ...
உன் நேசப் பேரொளி விரிகிறதே...
பேசா மடந்தை சிலவேலை
பேதை நீயெனவறிவேனே...
நீ பேசுஞ்சினுங்கல்கள் சிலவேலை
போதை தருமென அறியேனே...
எண்சான் தேகம் சிலிர்க்கிறதே
என்சான் வரையில் கறைகிறதே...
எதுவுமறியா இவள்போல...
எனக்குள் நுழையும் முனைப்போடு
எப்படித் துயில் கொள்ள முடிகிறது..
பெண்ணென்றாலே விந்தைதானோ...
பேரானந்தத்தில் வியக்கின்றேன்....

~*~
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 🙏 💐 🎉

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (17-Jul-18, 4:43 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 97

மேலே