தனிமையோடு பேசுங்கள்

இனிமை யான குரலிருக்கும்
குயிலும் கேட்க காத்திருக்கும்
பயமும் நெஞ்சை ஆட்கொள்ள‌
தனித்து உள்ளம் தவமிருக்கும்

அவரைக் கண்டு பிடித்துவிட்டால்
அளவாய் எடுத்துச் சொல்லுங்கள்
தனிமை விட்டு வெளிவரவே
தனித்திருக்கும் நேரம் சொல்லுங்கள்

வியக்க வைக்கும் அறிவிருக்கும்
எதையும் பேசும் திறனிருக்கும்
மேடை மேல ஏற்றிவிட‌
உடலும் நடுங்கும் கிலிபிடிக்கும்

அவரைக் காண நேரிட்டால்
விளங்க வைத்து பகிரிங்கள்
சக்தி கொண்டே வெற்றிபெற‌
புத்தி மதியும் கூறுங்கள்

திறமை நிறையக் கொண்டிருந்தும்
வாய்ப்பு கிடைக்கா ஆட்களுண்டு
ஒதுங்கி நிற்கும் அவரிடத்தில்
உரிமை கொண்டு பேசுங்கள்

தனிமை மிக நல்லதுதான்
கவிதை இயற்றும் தருணத்தில்
தனிமை மிக வேண்டியதே
ஆழ்ந்து படிக்கும் தருணத்தில்

தனித் துவத்தை வெளிப்படுத்த‌
தனிமை தேவை இல்லையே
இனிமை கொண்டே பேசிவிட‌
எதுவும் பாவம் இல்லையே

நமக்கு நாமே தனித்துபேசி
நமது ஆற்றல் தெரிந்துகொள்வோம்
பிறர் தனிமை போக்கும்வேளை
அவர் உயர்விற்கு வழிவகுப்போம்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (20-Jul-18, 10:48 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 276

மேலே