சண்டையின் ஆதிமூலம்

ஒருவன் பொழுது விடியபோவதால் கோழி(சேவல்) கூவுவதாக கூறினான்.
மற்றவன் இல்லை இல்லை கோழி(சேவல்) கூவுவதாலே பொழுது விடியப்போவதாக கூறினான்.
இருவருக்கு விவாதம் முற்றிட சண்டை தொடங்கிவிட்டது.

ஒருவன் கொடி அசைவதால் காற்றடிப்பதாக கூறினான்.
மற்றவன் இல்லை, இல்லை, காற்று அடிப்பதால் கொடி அசைவதாகக் கூறினான்.
இருவருக்கும் விவாதம் முற்றிட சண்டை தொடங்கிவிட்டது.

ஒருவன் பூமி சுழல்வதால் இரவு, பகல் உருவாகுவதாக கூறினான்.
மற்றவன் இல்லை, இல்லை இரவு, பகல் ஏற்படுவதால் பூமி சுழ்வதாக கூறினான்.
இருவருக்கும் விவாதம் முற்றிட சண்டை தொடங்கிவிட்டது.

ஒருவன் ஏவுகனையில் ஏற்படும் அழுத்தம் பின்னோக்கி பாய்வதால் ஏவுகனை முன்னோக்கி பாய்கிறது என்றான்.
மற்றவன் இல்லை இல்லை ஏவுகனை முன்னோக்கி பாய்வதால் அதன் அழுத்தம் பின்னோக்கி பாய்கிறது என்றான்.
இருவருக்கும் விவாதம் முற்றிட சண்டை தொடங்கிவிட்டது.

சரியானது எது என்பதில் இவர்களிடம் பிற பிரச்சனை இல்லை.
ஒருவரை ஒருவர் எதிர்க்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது.
இந்த மனநிலையே நம்மிடம் நிறைந்துள்ளது.
அதனாலேயே நம்மிடம் வாக்குவாதங்களும், சண்டைகளும் நிலவுகின்றன.
ஒன்றுபட மறுக்கிறோம்.
உதிரத்தைக் குடிக்கிறோம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jul-18, 12:51 pm)
பார்வை : 1826

மேலே