துன்பமென்றொரு தீ

துன்பத்தில் அளவொன்று உண்டோ ,
சிறிதென்றோ ,பெரிதென்றோ .

துன்பமென்று ஒன்றை நினைத்த மனம் ,
அனல் கொதிப்பொன்றை கொட்டும் மூச்சில்
எண்ணங்கள் பலவும் உள்ளுக்குள் உரசி
அனல் கொதிக்கின்ற மூச்சில்
சிறுநெருப்பொன்று பிறக்கும் .

மனம் என்ற மாயை என்ன செய்யும் ?
ஆனந்த நீர் ஊற்றி அதை குளிராக்குமா?
இல்லை ,
அக்கினி குஞ்சினை ஊதி பெரிதாக்குமா?.

குளிர்ந்த மனம் குடிகொள்ளும் அமைதியினை,
எரியும் மனமோ இரையாக்கும் நல்வாழ்வுதணை,
துன்பத்தால் ஒத்த மனம் கொண்ட அத்தனையுள்
எரியும் நெருப்போ ஏறிக்கொள்ளும்.

காடொன்று ஈன்ற
தீயொன்று போலாகும்
துன்பத்தை எண்ணத்தால் தூண்டுகின்ற மனம்.

எழுதியவர் : (23-Jul-18, 4:31 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 53

மேலே