காதல் மோதலில் வந்தது
காதலும் சில போது மோதலில் ஆரம்பமாகும்
எங்கள் காதலும் அப்படித்தான்
கல்லூரி முடிந்ததும் அவள் கைகளில் புத்தகம்
ஏந்தி என்முன்னே வருவதை நான் கவனிக்கவில்லை
- 'கீட்ஸ்' போயட்ரி இல் என் சிந்தனை
எங்கோ போய்க்கொண்டிருக்க, எதிரே வந்தவளை
கவனிக்காது மோதிவிட்டேன்-பிறகுதான் மோதியது
ஒரு பெண் மீது என்று, அந்த மோதல் தந்த மென்மை
ஸ்பரிசம் உணர்த்தியது -நான் 'சாரி' என்று சொல்வதற்குள்
அவள் நாக்கு நீண்டுவிட்டதோ...'கண்ணில்லையா இப்படி
மோதிவிட்டையே என்றாள்- அதுவரை குனிந்து இருந்த
நான் அவள் புத்தகத்தை தரையிலிருந்து எடுத்தேன்
'சாரி' என்றேன் அமைதியாய் ....அவள் கண்களைப் பார்த்தேன்
இப்போது சொன்னேன்' ஆமாம் மின்னலெனும் உன் பார்வை
என் பார்வையை மறைத்ததோ தெரியலையே
'கண்கள் மூட ஒரு நொடி, மோதிவிட்டேனோ, என்றேன்
இப்போது அவள் கோபம் மறைந்து புன்னகை உதிர்க்க
அது தென்றலாய் என் பார்வையில் கலக்க ......
ஒரு நொடியில் 'காதல் அரும்பியது'
இப்போது மீண்டும் அவள் முகத்தை பார்த்தேன்
அவள் அழகை முழுவதும் பார்த்தேன் ......அன்று
'கீட்ஸ்' எழுதிய 'எண்டிமியோன்'இல் ' a thing of beauty is
joy forever' கவிதை வரியின் உண்மை தெரிந்தது
புன்னகைத்தேன்,அவளும் ,....என்ன என்றாள்,
உன் அழகில் மயங்கிவிட்டேன் என்றேன் ,
'I TOO LOVE YOU ' என்றாள்,
மோதலில் வந்தது
இப்படியாகத்தான்
எங்கள் காதல்

