ஆன்மப் பயணம் - தொடர்ச்சி 1

நானே பேச்சைத் துவக்கினேன்.
" உங்கள் பெயரென்ன? ",என்றிட, " சொன்னால் பயப்பட மாட்டாயே. ",என்று சொல்ல
" பெயரை சொல்ல சொன்னால் என்ன பொடி போடுகிறீர்? ",என்று நகைத்து அடங்கும் முன், " இருள் உலகில் இருக்கு நான் கொடியவனென்று பலர் நினைப்பதால் என் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. ",என்றது.

" விருப்பமில்லை என்றால் சொல்ல வேண்டாம். நீங்க யாரென அறிந்து கொண்டேன். ",என்றதும், " மகிழ்ச்சி உன் பெயர் என்னைக் கவரும் விதமாக உள்ளது. ",என்று கூறி எழுந்து நடக்க,
நான் மட்டும் பாறைமீது அமர்ந்திருந்தேன்.
பாறை உயர்ந்தது,
நெருப்பு பாய்ச்ச ஒளியின் வேகம், கண்ணிமைக்கும்
புவிஈர்ப்பினுள் நுழைய மேலிருந்து நான் விழுந்து கொண்டிருந்தேன்.
விண்மீனைக் காணவில்லை.
காற்றின் உராய்வில் மிதந்து வந்தேன்.
பூமியில் இறங்கிய நான் அங்கும் இங்கும் இரைச்சல்கள் அதிகமாக மனிதச் சண்டைகள் அறியாமை வளர்ந்து கொண்டே சென்றது.
இது பூமி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு என் உடலில் புகுந்தேன்.
எதிரில் நாத்திகம் பேசிடும் ஒரு நண்பர் உட்கார்ந்திருந்தார்.
வணக்கம் கூறிவிட்டு எழுந்து நகர முற்பட்டேன்.
" எங்கே நகர்கிறீர்? ஏதும் பேசவில்லையே ", என்றார்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jul-18, 11:19 am)
பார்வை : 1103

மேலே