நீ உதட்ட சுழிக்கையில

நீ என்னை
மென்னு முழுங்குறியே
உன் உதட்ட சுழிக்கையில
என்ன குழிக்குள்ள தள்ளுறியே
நீ உதட்ட சுழிக்கையில
கத்தியில்லாம என்ன
கொன்னு சிரிக்கிறியே
நீ உதட்ட சுழிக்கையில
நான் பாலுண்ட போதும்
என் தொண்ட குழி
நனையலையே
சவுக்கடி பட்டா கூட
எரும்பு கடி போலிருக்குதே அடி
நீ உதட்ட சுழிக்கையில.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (26-Jul-18, 11:43 pm)
பார்வை : 276

மேலே