உடல் ஒத்திசைவு

முதலடிக்கு வலக்கால் முன்னெடுக்க
மன்னுந்தி இடக்கால் நின்றிருக்க ,.
முதல் சென்ற வலக்கால் மன்னுந்தி காத்துநிற்கும்,
இடக்கால் முன்கடக்க .
நிலைத்திருக்க நேர்நின்ற கால்கள்
நடை நடக்க செயல் மாறி செயல் செய்தன .

வலக்கால் முன்செல்ல,
வலக்கை காற்றை பின்தள்ள
இடக்கால் முன்செல்ல
இடக்கை காற்றை பின்தள்ள ,
செயல்களுக்கு சேர்ந்திருந்த
கரங்கள் ,
நடக்கையில் மட்டும்
பக்கம் வீசி நடை சமன் செய்தன.

இரு கால்கள் ஒன்று சேர்ந்து நடந்ததுண்டா?

ஊன்றலும் தாண்டலும்
ஒருசேர நிறைவேற
ஒத்திசைவில் கை , கால்கள் .

எழுதியவர் : (30-Jul-18, 8:18 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 37

மேலே