எனை தாங்க வா....!!!

சொப்பனங்கள் சிந்துதடி
என் தன்னந்தனி இரவில்
கண்ணிரண்டில் மின்னுதடி
உன் காந்த விழிப் பார்வை
எத்தனையோ காதல் அதை
இந்த உலகம் அது கண்டிருக்கும்
நம்முடைய காதல் என்றால்
புது உலகத்தையே கொண்டிருக்கும்
என் சின்ன சின்ன ஆசைகளை
உன்னிடத்தில் சொல்ல
ஏங்குகிறேன்
என் சித்திரை மாத வானவில்லை
உந்தன் கண்ணில் காண்கிறேன்
கருமேகம் போலே
எனை நனைக்குதே
ஒரு காதல் மேகம் தான்
நீ குடை பிடிக்க வா
மது போதை போலே
நான் தள்ளாடினேனே
கைதாங்கி நீ
எனை தாங்க வா.......!!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Aug-18, 7:46 am)
பார்வை : 84

மேலே