வானவில்
* அன்று ஆதவன் பார்வையால்
கருவுற்று கர்ணனைப்
பெற்றாள் குந்தி -அதன்பின்
ஆதவன் பார்வையால்
மழைத்துளி மேகம்
பிரசவிக்குதே வானவில்
அவன் பார்வையில் படும்போதெல்லாம்
(வானவில் என் மனதை எப்போதும் கவரும்
இயற்க்கையின் சிரிப்பே, இன்று புலவர்
கவின் சாரலன் அவர்கள் பாவைப்படித்தபின்னே
இப்படி ஒரு கற்பனை எழுந்தது)