விடுதலை
அகத்தின் உளளே பற்றிய வேள்வி திசை நான்கும் பரவிட என்னும்;
முகத்தின் மேலே ஒட்டிய வியர்வை விசை இன்றி தொட்டிடும் விண்ணும்.
மாற்றம் ஒன்று கொண்டிட தானோ துக்கம் பற்பல தொலைத்திட தூண்டும்;
ஏற்றம் ஒன்று கண்டிட தானோ ஏக்கம்
இருந்தும் தொடர்ந்திட தோன்றும்.
வெற்றியின் களிப்பில் நினைந்திட தானோ தோல்வியும் பார்த்து பழகி போகும்;
வெளிச்சத்தின் சுவடினில் வெகுந்தெழ தானோ இருளும் கூட இனித்து போகும்.
சிகரம் உடைத்து மேலெழ தானே
சிலையும் கூட வளைந்து பாடும்.
சரித்திரம் ஒன்று படைத்திட தானே
தரித்திரம் பலவும் தெறித்து ஓடும்...