Chandru - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Chandru
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Jun-2018
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  5

என் படைப்புகள்
Chandru செய்திகள்
Chandru - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2018 9:55 pm

வார்த்தைகளில் கோவத்தை வைத்து அன்பை மறைக்கும் வேளையில்;
வார்த்தைகளில் அன்பை மட்டுமே வைத்து கோவத்தை மறைக்கும் சிலர்
அனைவரின் மனதையும் வென்று விடுவர்...

மேலும்

Chandru - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2018 8:53 am

அகத்தின் உளளே பற்றிய வேள்வி திசை நான்கும் பரவிட என்னும்;
முகத்தின் மேலே ஒட்டிய வியர்வை விசை இன்றி தொட்டிடும் விண்ணும்.

மாற்றம் ஒன்று கொண்டிட தானோ துக்கம் பற்பல தொலைத்திட தூண்டும்;
ஏற்றம் ஒன்று கண்டிட தானோ ஏக்கம்
இருந்தும் தொடர்ந்திட தோன்றும்.

வெற்றியின் களிப்பில் நினைந்திட தானோ தோல்வியும் பார்த்து பழகி போகும்;
வெளிச்சத்தின் சுவடினில் வெகுந்தெழ தானோ இருளும் கூட இனித்து போகும்.

சிகரம் உடைத்து மேலெழ தானே
சிலையும் கூட வளைந்து பாடும்.

சரித்திரம் ஒன்று படைத்திட தானே
தரித்திரம் பலவும் தெறித்து ஓடும்...

மேலும்

Chandru - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 6:20 pm

மன்னிப்பாயா என் மனமே;
என் அழகிய செம்பூங்கா வனமே

மன்னிப்பாயா என் உணர்வே;
என் உணர்வுகள் முழுதும் உன்னை வடித்தேன்

மன்னிப்பாயா என் நினைவே;
என் நினைவுகள் செதைந்தும் உன்னை மறவேன்

மன்னிப்பாயா என் ஒழியே
என் உயிர் அது பிரிந்தும் உன்னை பிரியேன்

மேலும்

யாரிடம் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்? 15-Aug-2018 9:26 pm
Chandru - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 6:02 pm

உன் சிரிப்பினை விட சிறந்த மொழி ஏதடி
அதை கண்டதும் நான் என் வழி மறந்தேனடி

காதலும் மொழி என நீ உரைத்தாயடி
கவிதையில் மொழி இல்லை
உன்னை சேர்ந்தேனடி

சிரிப்பொன்றால் சிதைத்தாய்

என் மனதில் காதல் நஞ்சொன்று விதைத்தாய்

நீயே என் மொழி..

உன்னை கண்டிட புருவங்கள் உயர்ந்திட,
விரிந்துடும் என் விழி.

உன் சிறு பார்வை எனில் மாற்றம் செய்யும்

உன் சிறு விரல்கள் பிடித்திட என் மனமோ கொஞ்சமும் ஏங்கிடும்

கொஞ்சம் பேசிடு; கொஞ்சிட பேசிடு

உன் அழகிய வாசனை என்மேல் வீசிடு

கற்பனை இன்றி உன்னுடன் ஒன்றி

ஓர் யுகம் வாழ்ந்திட வேண்டும்

காதல் கனவுகள் அனைத்தும் மலர்ந்திட

உன் மடியில் மடி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே