அவள்
உன் சிரிப்பினை விட சிறந்த மொழி ஏதடி
அதை கண்டதும் நான் என் வழி மறந்தேனடி
காதலும் மொழி என நீ உரைத்தாயடி
கவிதையில் மொழி இல்லை
உன்னை சேர்ந்தேனடி
சிரிப்பொன்றால் சிதைத்தாய்
என் மனதில் காதல் நஞ்சொன்று விதைத்தாய்
நீயே என் மொழி..
உன்னை கண்டிட புருவங்கள் உயர்ந்திட,
விரிந்துடும் என் விழி.
உன் சிறு பார்வை எனில் மாற்றம் செய்யும்
உன் சிறு விரல்கள் பிடித்திட என் மனமோ கொஞ்சமும் ஏங்கிடும்
கொஞ்சம் பேசிடு; கொஞ்சிட பேசிடு
உன் அழகிய வாசனை என்மேல் வீசிடு
கற்பனை இன்றி உன்னுடன் ஒன்றி
ஓர் யுகம் வாழ்ந்திட வேண்டும்
காதல் கனவுகள் அனைத்தும் மலர்ந்திட
உன் மடியில் மடிந்திட வேண்டும்...