அறிவியல் அறிஞர்கள் கவிதை எழுதியிருந்தால்
கவிதை ஓர் அறிவியல் அறிஞர் எழுதியிருந்தால்
கற்பனையின் ஓவியமாக இல்லாமல்
உண்மையின் காவியமாய் அமைந்திருக்கும்!
எதுகை மோனைகள் பொருந்தாமல்
எதார்த்தங்கள் பொருந்தியிருக்கும்....
கவிதைகளில் பாக்கள் பயன்படுத்தாமல், நியூட்டன் விதிகள் பயன்பட்டுஇருக்கும் ....
புரியாத புதிராக, காதல் இல்லாமல் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு இருந்திருக்கும் ...
காதல் கடவுள், பாடுபொருளாக இல்லாமல் பூமி ,பால்வெளி கருந்துளை போன்றவை பாடுபொருளாகியிருக்கும் ....
காதலித்தவர்கள் கவிஎழுதாமல் கண்டுபிடிப்பாளர்கள்,மட்டும் கவி எழுதுவார்கள்....
காதல் தோல்விகள் கவிகளாகாமல்
சோதனை தோல்விகள் கவிகளாயிருக்கும்....
கவிதையின் ஊடகமாக, காதல் உள்ளதுபோல கணிதம் மாறியிருக்கும்...
இதயம் கண் இமை இதழ் போன்ற வார்த்தைகள் இல்லாமல் நிறை தொலைவு காலம் போன்றவைகள் இருந்திருக்கும்...
சரித்திர காதல்கள் என்பது மறைந்து சரித்திர கண்டுபிடிப்புகள் தோன்றியிருக்கும்....
கவிதைகள் கற்பனை மூலமாக பாராட்டாமல் நிருபணங்கள் மூலம் பாராட்டப்படும்....
கற்பனைகள் மூலம் பல கவிதைகள்
தோன்றாமல் பல கண்டுபிடிப்புகள் தோன்றியிருக்கும்...
கவிஞர்கள் எழுதும் கற்பனைகள் எல்லாம் அறிஞர்கள் ,கவிஎழுதியிருந்தால் உண்மையாயிருக்கும்.....