கவிஞன்

இவன் மை கொண்டு
உண்மை உவமை கொடுப்பவன்
புது மை கொண்டு
புதுமை படைப்பவன்

இவன் பேனா எனும்
உளி கொண்டு எழுத்துப் பாறையில்
கவிதைச் சிலை வடிப்பவன்

இவன் கையோடு எப்போதும் மையோடு இருப்பதால் என்னவோ
வறுமையும் இவன் மெய்யோடு

இவன் தாளில் கவிதை விதைக்கும் விவசாயி
விவசாயி நெல்லை விதைக்கிறான் இவனோ சொல்லை விதைக்கிறான்

நெல் கூட விளைந்து விலையாகிறது
இவன் சொல் விலை போவது எப்போது?
கந்தன் இவன் கடவுளல்ல
கம்பன் இவன் கடவுள்

பேனா இவன் ஆயுதம்
இவன் ஆயிரதில் ஒருவன்

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (21-Aug-18, 8:44 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kavingan
பார்வை : 111

மேலே