பெண்கல்வி---பஃறொடை வெண்பா---
பஃறொடை வெண்பா :
நெகிழி :
=======
கண்ணிடை வீழ்தூசு கண்வலி வார்த்தலன்ன
மண்மிசை வீழ்நெகிழி மண்வளத்தைச் சீர்குலைக்கும்
தீயிலெரிந் தேசுவாசம் தீண்டும் புகைதனில்
ஆயுண்நாட் தாழ்ந்திடும் ஆகத்திற் புற்றுநோய்
தந்துயிர் பூமிக் கெமன்...
பெண்கல்வி :
==========
இருட்கிழிக்குஞ் செஞ்சுடர் ஈந்திடும்பெண் கல்வி
திருவிளக்காய் வீட்டில் தெருவிளக்காய் நாட்டில்
அறியாமை ஆணாதிக் கத்தினிருள் நீக்கும்
அறிவோடும் நெஞ்சதை அச்சமற்று வைக்கும்
ஒருகுலமே கண்விழிக்குங் கேள்...