அடிமறி வெண்பா
==================
சர்வாதி காரம் சரித்து மனத்தாலே
கர்வங்கள் யாவும் கலைத்து விடுவாயே
தர்க்கங்கள் தம்மைத் தடுத்து விரைவாயே
நிர்க்கதியா னோரை நினைத்து
================================
ஈற்றடி முதலாம் அடியாக
===========================
நிர்க்கதியா னோரை நினைத்து மனத்தாலே
சர்வாதி காரம் சரித்து விடுவாயே
கர்வங்கள் யாவும் கலைத்து விரைவாயே
தர்க்கங்கள் தம்மைத் தடுத்து
===============================
ஈற்றடி இரண்டாம் அடியாக
================================
சர்வாதி காரம் சரித்து மனத்தாலே
நிர்க்கதியா னோரை நினைத்து விடுவாயே
கர்வங்கள் யாவும் கலைத்து விரைவாயே
தர்க்கங்கள் தம்மைத் தடுத்து
================================
ஈற்றடி மூன்றாம் அடியாக
============================
சர்வாதி காரம் சரித்து மனத்தாலே
கர்வங்கள் யாவும் கலைத்து விடுவாயே
நிர்க்கதியா னோரை நினைத்து விரைவாயே
தர்க்கங்கள் தம்மைத் தடுத்து
================================
மெய்யன் நடராஜ்
================================