மூன்று கல்
மூன்று கல்
---------------------------------
புனிதர், ஆன்மீகவாதி, ஆரூடத்தில் மிகவும் கைதேர்ந்தவர், பண்பாளர், அனைவராலும் நேசிக்கும் நபர் ஒருவர், தான் இறக்கும் தருவாயில், தன் மூன்று மகன்களுக்கும் சமபங்காக , தன் சொத்துகளை பிரித்து கொடுத்தவர், கூடவே மூன்று மகன்களுக்கும் மூன்று மிக பெரிய பாறாங்கற்களையும் தந்து விட்டு தன் பூத உடலை மண்ணுக்கு கொடுத்து விட்டு, தன் ஆன்மாவை விண்ணுக்கு எடுத்து சென்றுவிட்டார்.
மூன்று பிள்ளைகளும் கஷ்டப்பட்டு அந்த கல்லை அவரவர் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
முதல் மகன், அந்த கல்லை சுக்குநூறாக உடைத்து மணலுடன் சேர்ந்த , தன் வீட்டுக்கு முன் சின்னதாக நல்ல வழி அமைத்து கொண்டான்.
இரண்டாவது மகன் அந்த கல்லை பலவாறாக அறுத்து தன் வீட்டடின் முன் படிக்கட்டு அமைத்து அழகு பார்த்தான்.
மூன்றாவது பிள்ளை , அந்த கல்லை தன் தகப்பனார் வாழ்ந்த அதே வீட்டிக்கே மீண்டும் எடுத்து வந்தான். ஒரு நல்ல சிற்பியை அழைத்து, அந்த கல்லில், தன் தந்தையின் உருவச்சிலையை செய்ய சொன்னான்.
சில நாட்களில் சிற்பி அந்த கல்லில் அவன் கூறியவாறு அவனுடைய தந்தையாரின் உருவச்சிலையை மிக தத்ரூபமாக வடிவமைத்தார்.
தம் தகப்பனார் வாழ்ந்த அதே வீட்டின் முன் அந்த
சிலையை மூலமாக அமைத்து, அதனை சுற்றி சின்னதாக ஒரு கோயில் கட்டினான். அவன் செய்த இந்த அற்புத செயலை அங்கு உள்ள மக்கள் வெகுவாக பாராட்டி, பலரும் அவன் கட்டிய அந்த கோயிலுக்கு விஜயம் செய்ய ஆரம்பித்தனர். நாளுக்கு நாள், அந்த கோயிலின் புகழ் பல இடங்களிலும் பரவியது. சில வருடங்களில் அது ஒரு புண்ணிய ஸ்தலமாக மாறியது.
இப்படி தான் வாழ்க்கையில் வாய்ப்பு எல்லாருக்கும் வரும். அதை பயன்படுத்துவது அவரவர் திறமையை பொருத்தது.