சாகித்ய அக்காதமி நாவல்கள்

சாகித்ய அகாடமி பதிப்பகம் .முப்பது ஆண்டுகள் கழித்து தாகூரின் சோக்கர் பாலியை மறு பதிப்பு செய்திருக்கிறது .

அதாவது பரவாயில்லை .ஐம்பது ஆண்டுகள் கழித்து மண்ணும் மனிதரும் நாவலை[ இரண்டாம் பதிப்பு ] மறு பதிப்பு செய்திருக்கிறது .

சில ஆண்டுகள் முன்பு அகாடமி , வாழ்க்கை ஒரு நாடகம் நாவலை ,மனோதிடம் என்ற பெயரில் வெளியிட்டது . ஏன் பெயர் மாற்றமோ தெரியவில்லை . தள்ளுபடி விலையில் அனைத்தும் விற்று தீர்ந்தது . அந்த நாவல் வாழ்க்கை ஒரு நாடகம் நாவல் என எத்தனை பேர் அறிவாரோ .

கடலூர் சீனு
------------------------------

பொதுவாகவே நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அக்காதமி வெளியீடுகளுக்கு இச்சிக்கல் உண்டு. அவை மறுபதிப்பு வெளியாவதே இல்லை. பெரும்பாலான நூல்கள் நெடுங்காலம் தவமிருந்து அச்சாகின்றன. நிதி ஒதுக்கீடும் அதைத்தொடர்ந்த பணிகளும் அரசுக்கே உரிய முறையில் மெல்லமெல்ல நிகழும். ஒரு பதிப்பு வருவது ஒரு அரசாங்க ‘பிராஜக்ட்’ நிறைவேறுவதற்குச் சமம். ஒரு மேம்பாலத்தை கட்டி முடித்ததும் இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதுபோன்றது மறுபதிப்பு வருவது. அனேகமாக அது நிகழ்வதேயில்லை. இந்நூல்கள் வெளிவந்திருப்பது மிக நன்று

ஜெ
------------------------------

சாகித்ய அக்காதமி சமீபமாக வெளியிட்டுள்ள நாவல்களில் அமர் மித்ராவின் துருவன் மகன் முக்கியமான நாவல். இங்கே எடுத்துச் சொல்லாவிட்டால் பலர் வாசிக்கமாட்டார்கள். வரலாற்றுநாவல். உஜ்ஜயினி நகரத்தின் பின்னணியில் அமைந்த நாவல். முதல் விஷயம் பெ பானுமதியின் மொழியாக்கம் சரளமாக வாசிக்கும்படி உள்ளது. இரண்டாவதாக தொடர்ச்சியாகக் கடைசிவரை வாசிக்கவைக்கும் கதையோட்டம் கொண்டது. நாம் வரலாற்றை இப்படிக் கதையாக வாசித்தால்மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்ளமுடியும். துருவன் மகன் வாசித்தபின் நமக்கு உஜ்ஜயினி மிகத்தெரிந்த ஊராக ஆகிவிடும்

சிவராமகிருஷ்ணன்

எழுதியவர் : (25-Aug-18, 3:57 am)
பார்வை : 62

மேலே