கவிதாஞ்சலி
பன்முக வித்தகர் பைந்தமிழ்க்கலைஞர்
பாரினில் இவர்போல் நிலைப்பார் அரிது
அரசியல் களத்தில் ஆயிரம் பிரைக்காணும்
அரியதோர் பேறு அடைவோர் யாரோ ?
திரைகடல் ஓடியே திரவியம் தேடிய
திராவிட மைந்தனின் தலைவர் அவரே
சமத்துவம் என்னும் கருத்தினை விதைத்து
சாதியின் வேரினை பொசுக்கிய தீயே
வாலின் கூர்மையை விஞ்சும் வார்த்தையால்
வரலாற்றின் பக்கத்தை நிரப்பிய ஆதவன்
முத்தமிழ் வித்தகர் மூவுலகின் வேந்தர்
முத்தான தமிழுக்கு மாநாடு கண்டவர்
தேசிய அரசியலில் தென்னாட்டின் வலிமை
தெளிவுடன் பறைசாற்றிய கலைஞரின் திறமை
எழுத்தாணி துணை கொண்டு ஏழுலகை ஆளும்
எழிச்சிமிகு உரையால் இதயங்கள் வீழும்
அகவை தொண்ணுற்றிலும் அறிவாற்றல் விஞ்ச
ஆளுமை மிளிர்ந்த கலங்கரை விளக்கே
மக்களின் அரசாய் யாவரும் மகிழ
மாண்பின் மகத்துவம் - திராவிட தத்துவம்
எழில்மிகு சென்னை நினைத்திடும் உன்னை
எட்டுத்திக்கும் வணங்குமினி மெரீனாவின் மண்ணை
வேளாண் செழிக்க பகலவன் ஒளி
வேற்றுமையில் ஒற்றுமை காண்பர் யாரினி
வாழ்க கலைஞர்... வளர்க நின் புகழ் ...