சுதந்திரம்
ஒவ்வொருவரின் மனதிலும்
அமைதி என்னும் விதையை ஊன்றி
ஒழுக்கம் என்னும் உரமிட்டு
பகுத்தறிவு என்னும் தண்ணீர் ஊற்றி
கட்டுப்பாடு என்னும் வேலி போட்டு
வாழ்க்கை என்னும் மரத்தை
என்று வளர்கிறார்களோ அன்று தான்
முழுமையான சுதந்திரம் கிடைக்கும் .