ஹைக்கூசென்ரியு

மெதுவாய் வரும் பேருந்து
பதுங்கும் பாதசாரிகள்
சாலையில் தேங்கும் நீர்...!

சாப்பாட்டு நேரம்
பட்டியலிடும் சர்வர்
வயிறு நிறைய பசியோடு...!

மோதி மரிக்கிறது
கரைமேவும் அலை
கடல் திரும்பும் அலையோடு...!

மரத்தினடியில் தூங்குபவன் முகத்தில்
சிந்தியது நீர்த்துளிகள்
கிளையிலிருந்து பறந்தது பறவை...!

கிணறு வெட்ட வெட்ட
நிறைய கிடைக்கிறது
மணல்...!

சாப்பிடச் சொல்லி
வற்புறுத்துகிறாள் மகள்
வாய்திறவா பொம்மையிடம்...!

வீட்டுக்குள் நுழைந்த குரங்கு
அமைதியாய் திரும்பிப் போனது
பழம் கொடுத்தவுடன்..!

பக்தர்களின் பரவச சத்தம்
கேட்கவில்லை கடவுளுக்கு
பிச்சைக்காரர்களின் ஈனஸ்வரம்...!

கருவறையில் கடவுள் சிலை
கவலையில் சிற்பி
செதுக்கலில் குறை...!

கட்டிடத் தொழிலாளி
ஓய்வெடுத்தான் சிறிது நேரம்
கோவில் கருவறையில்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Aug-18, 3:34 pm)
பார்வை : 315

மேலே