அம்மா தோசை
பால்கனியில் நான் அமர்ந்து கேட்பதெல்லாம்
நான் போதும் என்னும் வரை தோசை.
அதை ஊற்றி தர அவளுக்கும் ஆசை.
உடல்பருமன் கொண்ட அம்மாவின்
உள்ளங்கால் வலியை உணர்ந்த தோசைக்கல்,
தோசையின் எண்ணிக்கை ஐந்தை தொட்டால் கருகும்.
அதனால் என் வாயில் வரும் சொற்கள் கருகும்.
இன்று இங்கு தனித்து சமைக்கும் நான்
ஊற்றும் தோசை எண்ணிக்கை
கூடும் போது,
உணர்ந்தேன் உன் கால்வலி, தோசை கல்வழி.
இன்று கருகியது
தோசை மட்டும் அல்ல அம்மா
என் இதயமும் தான்.