என்னவளே

என்னவளே,
நீ சற்றும் நாணம் குறையா புன்னகையோடு
எனை நோக்கி சம்மதம் கூற என் வாழ்வின் அர்த்தம்
உணர்ந்தேனடி!!
நீ காண இயலாக் காவியமாய் தமிழ் பேச
எனை அறியாமல் என் சர்வமும் உன்னுள்
அடங்கியதடி!!
நீ என் வாய்மொழி கேட்டு “உம்ம்” கொட்ட
நான் மெய் மறந்து உன்னுள்
தொலைந்தேனடி!!
நீ கொலுசணிந்து நடந்து வர
நான் கற்ற ராக வகைகள் பொய்யென்று
அறிந்தேனடி!!
நள்ளிரவில் நீ முற்றம் வர
அந்நிரூபத்தின் ஒளிவிளக்கான சீதகனுக்கும் கர்வம்
தொலைந்ததடி!!