உறவு தேடும் உள்ளங்கள்

ஏழையாகப் பிறந்தாலும்
இளையவளாகப் பிறந்தேன்
அதனால் இன்புற வளர்ந்தேன் .

இடை மேல் சுமக்கும்
தமக்கை பாசத்தோடு
வாரி அணைத்து
முத்தம் கொடுக்கும் அன்னை .

கேட்ட பொருட்களை
வாங்கிக் கொடுத்து
ரசிக்கும் தந்தை .
அன்பான குடும்பமாக
மகிழ்வோடு வாழ்கை நகர்ந்தது

இடி போல் செல் விழுந்தது
சிதறி ஓடியதில் புரட்டி போட்டது
வாழ்வு அம்மா அப்பா இறைவனடி
அனாதையாக்கியது எங்கள் விதி .

அன்று சிரிப்போடு சோறு
ஊட்டினாள் இன்று எச்சி
சோறு எடுத்து உச்சி
முகர்ந்து ஊட்டும் தமக்கை
மறந்தாள் சிரிப்பை .

கூடி விளையாடுகிறோம்
திட்டு வாங்கி உணவு தேடுகிறோம்
யார் யாரோ பெற்ற பிள்ளை
நாங்க ஊர் வைத்த பெயர்
அனைவருக்கும் ஒன்றே
ஒன்று அனாதைகள் ர

உண்மை பெயர் சொல்லி
அழைக்க உறவு என்று யாரும் வருவதில்லை விடியும் பொழுதெல்லாம்
உறவு தேடும் எங்கள் உள்ளங்கள்.


எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Sep-18, 8:33 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 82

மேலே