தேய்பிறையின் முழுநிலவு

பெண்: இமைக்கின்ற போதெல்லாம்,
இடைவேளை வேண்டும்?
இமையாகி போகவா? நான்...
ஆண்: அணைக்கின்றபோதெல்லாம்,
அதிகாரம் நீளுமா?
அமையாகி ஆளவா? நான்...
பெண்: காதலை சுருக்கி,
கண்களில் தேக்கிய,
மாயனா நீ?
ஆண்: என்னையிரை இறுக்கி,
கூந்தலில் கட்டிய,
வித்தைக்காரியா நீ?
பெண்: இனி காதலும்
மோட்சம் பெறும் நம்மால்...
ஆண்: அதுக்கூட
வரம் கேட்கும் தன்னால்...

பெண்: சூரியனை நீயும் மெல்ல ஒதுக்கி,
உன் கனவுகளை மேலும் மேலும் அடுக்கி,
கண்ணில் ரெண்டில் நிறைந்தாய்...
ஆண்: முட்களெல்லாம் பூக்களாய் மலர்ந்து,
உன் முந்தானையில் எந்தனுள்ளம் சரிந்து,
உயிர்வரை இனித்தாய்...
பெண்: சத்தமிடும் அலையில்,
நித்தம் உன்னை தேடி,
யுத்தம் நூறு செய்ய வேண்டும்...
ஆண்: அர்த்தமுள்ள உறவில்,
முத்தம் கோடி இறைத்து,
குத்தம் செய்ய நீ போதும்...

ஆண்: கோடைக்கூட வாடை வாசம் வீச,
என் தனிமையில் நீயும் கொஞ்சி பேச,
முணங்களில் முளைத்தாய்...
பெண்: நீ அறியாமல் மீசையில் மறைந்து,
உன் அணைப்பிலே நாள்தோறும் மெலிந்து,
விடியலை தவிர்பேன்...
ஆண்: தேவையின் போது,
சேவைகள் செய்து,
தேய்பிறை நீயாக...
பெண்: வளர்பிறை நாளில்,
வளைக்கின்ற நேரம்
முழுநிலவு உன் முகமாக...

எழுதியவர் : ஸ்ரீதேவி (4-Sep-18, 8:42 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 155

மேலே