பூர்ணி கவி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பூர்ணி கவி
இடம்
பிறந்த தேதி :  28-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jul-2017
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  24

என் படைப்புகள்
பூர்ணி கவி செய்திகள்
பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 9:05 pm

தமிழ் மொழியே,

இளஞ்சிவப்பில் கூரை நெய்து
அதை நனைக்காமல் ஏந்திக் கொள்ளும் நதி அமைத்து
வானம்பாடியின் மெல்லிசையில் வரவேற்பு கீதம் இசைத்து
அவ்விசைக்கு சுருதி சேர்க்கும் நதியின் நீரோட்டம் உருவாக்கி இயற்கை வரைந்த ரம்மியமான சித்திரமெனும்
இவ்வுலகிற்கு மேலும் அழகு சேர்க்கும் ஒப்பனையாய்…..
நீயும் நானும்!!

மேலும்

அருமை நட்பே 10-Mar-2018 7:30 pm
பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 9:04 pm

வனமாக நான் இருக்க​
எனை நிரைக்கும் குயிலிசையாய் நீ வந்தாய் எனக்கு!!

பார்கடலாய் நான் இருக்க
எனை துள்ளி குதிக்க செய்யும் கடல் காற்றாய் நீ வந்தாய் எனக்கு!!

சிப்பியாய் நான் இருக்க
முத்து செய்ய சிறு துகளாய் நீ வந்தாய் எனக்கு!!

பட்டாம்பூச்சியாய் நான் இருக்க
எனை ஈர்த்திழுக்கும் தேன் மணமாய் நீ வந்தாய் எனக்கு!!

இசையாய் நான் இருக்க
எனக்கு அர்த்தம் கொடுக்கும் வரிகளாய் நீ வந்தாய் எனக்கு!!

கவிஞனாய் நான் இருக்க
என் பிழை ரசித்து அர்த்தம் கண்டுகொள்ளும்
ரசிகையாய் நீ வந்தாய் எனக்கு!!

மேலும்

பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2018 7:38 pm

அதிகாலை விடியலும் நீ துயில் எழும் அழகை காண தானோ!
தென்றல் வீசுவதும் நீ உன் கலைந்த கூந்தலை சரி செய்யும் அழகை காண தானோ!
மழைத்துளிகள் போட்டி போட்டு பூமி அடைவதும் உன் கண்ணம் தீண்டும் ஆசையில் தானோ!
கடலலைகள் நாள் முழுவதும் கரைகாண வருவதும் உன் பாதம் தொடும் நப்பாசையில் தானோ!
சிறுபூக்கள் மணம் வீசுவதும் உன் நறுமணம் மீது கொண்ட பொறாமையில் தானோ!
விண்மீன்கள் தோன்றுவதும் நீ துயில் கொள்ளும் அழகை ரசிக்க தானோ!

மேலும்

உன் கட்டளைகள் தீராத வரை என் கண்கள் உன் அழகோடு கட்டுப்பட்டு நடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Feb-2018 1:04 am
பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2017 3:44 pm

விழிகளில் மையிட்டு
புருவம் குவித்து
அம்புதொடுக்கக் காத்திருக்கும்
அவள் பார்வை!!

பளிங்கு பிறையின் மையத்தில்
சிறுபொட்டு வைத்து
புவிஈர்ப்பு விசையை தோற்கடிக்கும்
அவள் நெற்றி!!

என்றும் அணியத்தவறா
இதழ்கள் சுளித்து
கன்னங்குழிகள் அலங்கரித்த
அவள் புன்னகை!!

கவிஞனையே சொல்லற்று போகச்செய்யும்
அழகோவியமாய் அவள்!
அவ்வோவியத்தை வர்ணிக்க திணரியபடி
எதிரில் தேநீர்குவளையுடன் நான்!
என தினமும் காவியமாய்
எங்கள் காலை பொழுது!!!

மேலும்

பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2017 10:38 am

வாழ்வைக் கண்டேன் என்றாய்…
என்னைக் காணும் வேளையில் எல்லாம்
வெட்கம் கொண்டேன் என்றாய்…
என்னுடன் பேசும் வேளையில் எல்லாம்
காதல் கொண்டேன் என்றாய்…
என் நினைவு வரும் வேளையில் எல்லாம்
ஆனால் இன்று ஏனோ…….
அவள் வந்துவிட்டாள் என்கிறாய்
நான் இருந்த இடங்களில் எல்லாம்..!!!

மேலும்

நன்றி:) 09-Oct-2017 10:51 am
எளிமையான வார்த்தைகள் அருமை ..!!! வாழ்த்துக்கள் ..... 08-Oct-2017 8:33 pm
பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2017 5:39 am

என் காலை வேளைகளை
அவன் புன்னகை அலங்கரிக்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

நான் பேசும் பேச்சை அப்புன்னகை மாறாமல் கைதாங்கிய கன்னத்துடன்
அவன் கேட்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

என் மாலை நேர சோர்வுக்கு
அவன் தோள் தந்து கைகோர்த்து கதைகள் பல பகிரும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

நான் எழுதும் கவிதைகளில்
அவன் பிழை ரசித்து படிக்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

மேலும்

நன்றி தோழரே!! 07-Oct-2017 7:18 pm
காலங்கள் போடும் பூட்டுக்களில் காதலும் ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 8:38 am
பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2017 7:47 pm

மழை விட்ட என் வானில்
கதிரிவனின் ஒளிச்சித்திரமாய்
உன் பார்வை, வாசம், வார்த்தை,
மௌனம், கோபம், காதல், நட்பு…..
வானவில்லின் ஏழு வர்ணங்களாய் தோன்றி
என் வாழ்வை சித்திரமாக்கின!!!!

மேலும்

நன்றி தோழரே!! 02-Oct-2017 10:49 am
இதயத்தின் ஓடையில் நினைவுகளின் படகுகள் நீந்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 9:35 pm
பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2017 8:04 pm

மழைவிட்ட பின்
கதிரவன் தரும் வானவில்லாய்
என் மகிழ்வைக் கொண்டாட நீ இருந்தாய்!!

வெள்ளத்திற்கு பின்
கதிரவன் தரும் முதல் ஒளிக்கற்றையாய்
நான் சோர்ந்தபோதெல்லாம் நீ இருந்தாய்!!

என் மகிழ்விலும் சோகத்திலும் உடனிருந்த
உன் தோழமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது!!

மேலும்

நன்றி தோழரே!! 14-Sep-2017 6:10 pm
எழுதிய வார்த்தைகளில் எல்லாம் நட்பை அப்பிவிட்டாய் தோழி அருமை 14-Sep-2017 4:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே