துருபத கன்னிகை
பெண்ணை அவமதித்ததால் 12 ஆண்டுகளுக்குப் பின்
கௌரவர்கள் இழந்ததையும்
வேள்வியில் உதித்த மங்கை அவளுக்கு
தன் கணவர்களால் நீதி கிடைத்ததையும்
போதிக்காமல்......
தன்னை பற்றி அவச்சொல் கூறிய நாவையும்
தன்னை தீண்ட ஓங்கிய கைகளையும்
அக்கணமே வெட்டி தனக்கான நீதியை
தானே பெற்றுக் கொண்டாள்
துருபத கன்னிகை
என்று போதித்திருந்தால்...
ஒரு பெண்ணை அவமதிக்க
எந்த நாவும் நீளாது
எந்த கையும் ஓங்காது!