காவியக் கனவொன்று கண்டேன்

காவியக் கனவென்பேன்!
அடி கண்ணம்மா காலத்தை கூட வென்றதென்பேன்!
பிரம்மனும் கவிஞன் என்பேன்
உன் கருவிழி காணும் போதெல்லாம்!
பிரம்மாஸ்திரமும் திக்குமுக்காடும் என்றேன்
உன் புருவ மத்தியில் வந்து நின்றால்!
தங்கமும் என்ன தவம் புரிந்ததோ
உன் கூர் மூக்கில் மூக்குத்தியாய் வந்தமர!
ஒரு திருஷ்டி பொட்டும் போதுமோ உன் நாடிக் குவியலின் அழகுக்கு!

எவ்வளவு யுகங்கள் தவம் புரிய வேண்டுமோ
இவ்வழகு கனவை நேரில் காண!
கனவில் கண்ட காரணத்தால் என் காதல் மேல் சந்தேகம் கொள்ள வேண்டாம் கண்மணியே!
ஆழியும் தோற்குமம்மா
என் பிரியத்துடன் நிகர் செய்து பாராத்தால்!

எழுதியவர் : பூர்ணிமா கவி (1-Apr-19, 12:26 pm)
பார்வை : 228

மேலே