அந்த இருவர்

அறிந்தவன் கொள்வது
அச்சம்,
அறியாதவனின் தைரியம்
அசட்டுத் தைரியம்..

ஆற்றின்
ஆழம் தெரிந்தவன்
அக்கரையில் நிற்கிறான்
தயங்கி..

அயலூர்க்காரன் தைரியமாய்க்
காலை விடுகிறான்
ஆழம் தெரியாமல்,
பின்
அவதிப்படுகிறான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Apr-19, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : antha iruvar
பார்வை : 78

மேலே