கோவைப் பழ இதழழகி
மாம்பழத்து நிறத்தழகி
மதி போன்ற முகத்தழகி
கார்மேக குழலழகி
கண்ணாடி போன்ற கழுத்தழகி
தோதான தோளழகி
தோற்றத்திலே பேரழகி
கோடை மின்னல் இடையழகி
கோவைப் பழ இதழழகி
கொஞ்சும் சொல் தமிழழகி
அருவிப் போன்ற சொல்லழகி - இந்த
ஆண்மகனுக்கு ஏற்றழகி.
- - -நன்னாடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
