கருவறை முதல் கல்லறை வரை-
பறக்க மறந்த பனித்துளிகள்
படர்ந்து கிடந்த பாதையோரம் குளிரைத்துறந்த மொட்டுகளோடு
ஆறடி உயற பூச்செடியில் ஒற்றைப் பூ பூத்தாற்போல், என் கைப்பற்றிய மலரோடு நானும் நின்றிருந்தேன் நீ வருவாயென, வருவாயென..
நித்திரை கனவில்
நித்தம் நீ வந்தாயென, சித்திரை அனலில் சிரித்த வண்ணம் நின்றிருந்தேன் நீ வருவாயென, வருவாயென .
நீ வருவாயென,
சாலையோரம் மலர்ந்த
மலர்களெல்லாம் உதிர்ந்து போனதென்ன!
என் கைகொண்ட மலரெந்தன் மனக்கண்ணாடி ஆனதென்ன!
வான்மதியே,
வானகத்தாள் இருகண்ணம் இருபொழுதும் சிவந்தபின்னும் என்னகத்தாள்நீ, வருவாயென, வருவாயென, சிந்தைதனில் ஓரெண்ணம் ஓயாமல் எழுந்ததென்ன!
நீ வருவாயென பார்த்து பார்த்து
பசித்த என் பார்வைக்கு
பசியாற்ற, கசிந்த
என் கண்ணீர் துளிக்கு கைகுட்டையாய் கரம் தருவாயென, தருவாயென காத்திருந்து, காத்திருந்து,
காலமெல்லாம் கழிந்தும்
என் காதல் இன்னும் மாறவில்லை...
என் மனம்புகுந்த மாளிகையின் முகவரி அறிந்தபின்னும் நான் போக வழியில்லையே முறையிடவும் மொழி தெரியவில்லையே
அன்பே,
உளமிலா உடலுக்கு உயிரோ! கூரையிலா குடிலுக்குள் குடியிருப்பது போலாகும்
நான் கல்லறைக்கு போகும் முன்னே
என் காதலுக்கு உயிர்கொடு பெண்ணே!
--கருவறை முதல் கல்லறை வரை காதலின்றி வாழ்தல் ஆகுமா