கட்டுக்கடங்கா ஆசை என்னுள்
காந்தத்திற்கு கட்டுப் பட்ட
இரும்பைப் போல் ஆனேனடி
உன் கருவிழி கடைக்கண்ணின்
அமிழ்த பார்வையினாலே
கட்டுக்கடங்கா ஆசை என்னுள்
காட்டாற்று வெள்ளம் போலே
கால் முளைத்து ஓடி ஓடி
கருப்பழகி உனைத் தேடுதடி
தேர்ந்தெடுத்த பூக்களினாலே
கோர்த்து வைத்த பூச்சரடே
தேவை உந்தன் காதலடி
தேவதையே எனை தேர்ந்தெடேண்டி.
- - -நன்னாடன்