காதலெனும் மாயம்
அவ்வ௧ண்ட அம்பரமும் சில நொடிநேரம் ஸ்தம்பித்தது ௭ன்றான் அவன்!!
பார்கடலும் அலைகள் ஓய்ந்து நிசப்தம் ஆனது என்றாள் அவள்!!
விஞ்ஞானிகள் பலரும் காணத் தவறிய பிரபஞ்சத்தை அவன் கண்களில் ௧ண்டதாய் கூறினாள் அவள்!!
நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அழகு மலரை அனுதினமும் அவள் புன்னகையில் கண்டதாய் கூறினான் அவன்!!
இருவரும் சேர்ந்துவிட வேண்டி அவ்விகங்கமும் ௧ரைந்து தவம் செய்வதாய் கூறினர்!!
காதலெனும் மாயமோ இப்படி கவி வரைய ௧ற்றுத் தருமென்று அறியப்பெற்றேன் நான்!!