அவன்

என் காலை வேளைகளை
அவன் புன்னகை அலங்கரிக்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!
நான் பேசும் பேச்சை அப்புன்னகை மாறாமல் கைதாங்கிய கன்னத்துடன்
அவன் கேட்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!
என் மாலை நேர சோர்வுக்கு
அவன் தோள் தந்து கைகோர்த்து கதைகள் பல பகிரும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!
நான் எழுதும் கவிதைகளில்
அவன் பிழை ரசித்து படிக்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!