உன் வரவு

மெல்ல மொட்டவிழ்ந்து..
மெளனமாய் இதழ்காட்டி..
பனித்துளிகள் சில சுமந்து..
பாரம் தாஙகாது சிரம் தாழ்த்தி..
கதிரவன் வரும் தருணம்..
காதலோடு உள்ளம் கிடத்தி..
புதுமலராய் மலா்ந்திட்ட களிப்பில்..
புத்துயிர் பெற்றதோ இதயம்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Oct-17, 3:52 am)
Tanglish : un varavu
பார்வை : 197

மேலே