காதல் நினைவுகள்

காலையில்
எழுந்ததும்
முதல்
நினைவு
நீ தான்

இரவில்
கடைசி
நினைவும்
நீ தான்

இடைப்பட்ட

கனவிலும்
நீ தான்

நனவிலும்
நீ தான்

என் காதலை
நீ ஏற்று கொண்டிருந்தால்
கூட
இத்தனை முறை
உன்னை நினைத்திருப்பேனா

ஐயம் தான்

என் நினைவுகளற்ற உன் வாழ்வில்

உன் நினைவுகளோடு என்றும் .............................

எழுதியவர் : senthilprabhu (6-Oct-17, 6:53 am)
Tanglish : kaadhal ninaivukal
பார்வை : 161

மேலே