வரம்

என் கண்மணியின் முதற் சோம்பலும்
அம்முழுமதியை இரவு தாண்டி தங்கவைக்குமே!
வேகம் அடங்கிய இளந்தென்றலோ அவள் ஒற்றை முடி
நெற்றியில் விழும் அழகு காண வீசத்துவங்குமே!
அவள் கால் கொலுசின் இசை கேட்க
கடல் அலையும் கரை சேருமே!
என் கோதை அவள் பேச்சு கேட்டு
செந்தமிழும் பெருமை கொள்ளுமே!
என் மதியழகி வதனம் கண்டு
அந்த சந்திரனும் வெட்கிக் கரையுமே!
அவள் கூந்தல் அடைந்து மோட்சம் பெற
குறிஞ்சியும் பன்னிரெண்டு ஆண்டு தவம் புரியுமே!
அவள் கண்களின் ஒளி கண்டு தாளாமல்
விண்மீன்களும் போட்டி போடுமே!
பார்கடலுக்கும் சந்திரனுக்கும் ஏன்….
அத்தவம் புரிந்த குறிஞ்சிக்கும் கிட்டாத பாக்கியம்
என்னவளின் காதலினால் எனக்குக் கிட்டியதும்
நான் பெற்ற வரம் அல்லவோ!!