காதல் வலி
காதல் கவிதை
பொங்கல்வைக்க அனைவரும்
குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர்
என் பாதங்கள்
மட்டும் அவள் வீட்டை நோக்கி நடந்தது
அவள் பொங்கல் வைத்தாள்
பொங்கி வழிந்தது கள்
அவள் யானத்தில் நீர் நிரப்ப
வெளியே வரும்போதெல்லாம்
மயானத்தில் உயிர் நிரம்பியது
இவள் அமர்ந்தபின்தான்
போதி மரத்திற்கே ஞானம் வந்தது
இனி புத்தரே அமர்ந்தாலும்
மனைவியோடு சேர்ந்து வாழ்
எனும் ஞானம் வழங்கவேண்டும் என்று
நதி முகத்தோர நாணல் கூட
இந்த ரதிமுகத்தோர நாணம் கண்டு
நாணி வளைந்தது
பொட்டு இல்லாத இவள் முகம்
அமாவாசை
கல்யாணமாகாத இளைஞருக்கோ
இவளை தன் பிள்ளைக்கு அம்மாவாக ஆசை
இவள் பெண்ணுக்குப் பிறந்தவள் அல்ல பொன்னுக்குப் பிறந்தவள்
மாலையில் சேலையில் சோலையோர சாலையில் இவள்
நடந்தால் கூட்டம் வழிந்தது சிறைச் சாலையில்