காத்திருப்பேனடா...

கண் மூடி உறங்கையிலே...
கண் கொண்டு ரசித்திட்டான்

கன்னி நான் கண்ணுறங்க...
காவலுந்தான் காத்திட்டான்

காலையில் கண் விழித்து...
கனவு தானோ?? யோசித்தேன்...

கனவில்லை நிஜம் என...
காத்திருந்தான் காளையவன்

கண்ணாடி ஜன்னல் வழி...
கண்டு விட்டேன் அவனை

கையசைத்து அழைத்திட்டேன்...
கண்ணடித்து மறைந்திட்டான்...
கதிரவன் வெளிச்சத்துள்

என்...
காதல் சந்திரனே...

காத்திருப்பேனடா...
காதலோடு நானும்...
கார் இருள் சூழும் வரை...

காட்டி டா...
காளையே... ( உன்)
கனிவு முகத்தை...

கன்னி என்...
கண்களுக்கு...
காலம் உள்ள வரை...
என் காலம் உள்ள வரை.

எழுதியவர் : இன்னிலா (8-Sep-18, 6:54 am)
சேர்த்தது : innila
பார்வை : 58

மேலே