குரை படு பொருள்....
தீக்குச்சிக் கிழித்த
சத்தத்தில்
விழித்த நாயொன்றின்
கண்ணில் பட்ட
அந்தத் தீக்குச்சி
நெருப்பைக் கண்டு
அஞ்சி
பின்னங்காலூன்றி
முன்கால் தூக்கிக்
குறித்த பொழுது
பொங்கிய ஓலம்
குடிசைகள் எரிந்து
அடங்கிய அன்று இரவு
வரை ஓயாததன்
காரணம்
கரை வேஷ்டிக்குத்தான்
தெரியும்!...
தெரு நாய்க்குத்
தெரியாததில் வியப்பில்லை.....