நடமாடும் நடைப்பிணங்கள்

நடமாடும் நடைப்பிணங்கள்
======================
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் இருந்து வந்திருந்த வினோத், கிளிநொச்சி நகர சந்தைக்கு தன் பிள்ளைகளுடன் சென்றிருந்தான்.
அங்கே நின்று கொண்டு இருந்த கரனுக்கு
தனக்கு முன்னால் நிற்கும் குமார் குடும்பத்தை பார்த்ததும் ஏதோ உணர்வு வந்தவனாய் சத்தமாகப் புலம்பத் தொடங்கினான்
அப்போ அருகில் வந்த ஒரு அம்மா ,"அந்த பொடியனுக்கு விசர், பார்த்து நில்லுங்கோ" என்று கூறிவிட்டு செல்ல,
வினோத்தின் கண்களும் கலங்கியது. என்னுடைய வயது ஒத்தவனாய் இருக்கிறான்,
பாவம் என்ன நடந்ததோ மன நலம் குன்றியே நடைப்பிணமாக வாழ்கிறான் என சிந்தித்தவாறு
பழக்கடைக்கு சென்றான்
அப்பொழுது தலையை
சொறிந்த வண்ணம்
அதே மனநலம் குன்றிய பொடியன் வர
பழக்கடைக்காரர் உணவு பொதியை கொடுத்து அனுப்ப தன் நிலை தெரியாது சிரித்தவண்ணம் பொதியை கைகளில் வாங்கியபடி அங்கிருந்து சென்றான்.
அப்போ வினோத்தின் மகன்" அப்பா அப்பா,
அந்த மாமா ஏன் இப்படி இருக்கிறார் என கேட்கவும்,
வினோத் "அந்த மாமா நல்ல மாமா தான்,அவருக்கு கொஞ்சம் உடம்பு சுகமில்லை" எனப் பிள்ளையிடம் சொல்லி சாமாளித்துவிட்டு, கடைக்காரரிடம் காசைக் கொடுத்தான்.
அப்பொழுது
மனம் நொந்த கடைக்காரர், "அந்த பொடியனும்(கரனு)
உழைப்பால் உயர்ந்து வசதியாய் வாழ்ந்தவன் தான் , காலத்தின் கொடுமையால்
இன்றைக்கு இந்த நிலைக்கு வந்துவிட்டான் "என்றபடி அவனுடைய கடந்தகாலத்தைப்பற்றிக் கூறத் தொடங்கினார்.
"என்னுடைய சொந்தக்கார (க்) பொடியன் தான் தம்பி இவன், வீட்டிலேயும் சரி வெளியிலும் சரி படு சுட்டி
அவனுடைய தங்கை தாய் தந்தை
யுத்தத்தின் போது ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்,
விடுதலைக்காய் வீறு கொண்டு எழுந்தவன்
புனர்வாழ்விற்கு பின்னர் இந்த நிலைக்கு வந்துவிட்டான்" என கூறி முடிக்கவும்
கதையை கேட்ட வினோத்துக்கு, என் உயிர் நண்பனா இவன்? இவனை பார்ப்பதற்கு நான் எவ்வளவு ஆவலாக இருந்தேன் ,கடவுளே ,
இந்த நிலையிலா நான் இவனை காணவேண்டும்" என தன் தலையில் அடித்துக்கொண்டான்.

எழுதியவர் : காலையடி அகிலன் (16-Sep-18, 10:18 am)
பார்வை : 193

மேலே